இப்படி வைத்தால் விநாயகர் உங்கள் வீட்டிற்குள் நுழையும் அனைத்து தீய சக்திகளையும் தடுத்து, வளத்தை கொடுப்பதோடு அவர் உங்கள் வீட்டை பாதுகாப்பார்.
விநாயகரை முகப்பு வாயிலில் வைத்க்கும்போது ஜோடியாக தான் வைக்க வேண்டும்.
அதில் ஒன்று நுழைவாயிலை பார்த்த வண்ணம் இருக்க வேண்டும். மற்றொன்று அதற்கு எதிர்புறமாக பார்த்திருக்க வேண்டும்.
ஏன் என்றால் ஏதேனும் அறையில் விநாயகர் பின்புறத்தை பார்த்தபடி வைத்தால், வறுமை வந்து சேரும் என்று நம்பப்படுகிறது.
அதனால் அதனை ஈடு செய்யும் விதமாக மற்றொரு சிலையை எதிர் திசையில் வைக்க வேண்டும்.
வீட்டிற்கு விநாயகர் சிலை வாங்க வேண்டுமானால், வலது பக்கமாக தும்பிக்கையை கொண்டுள்ள விநாயகரை தவிர்க்க வேண்டும்.
வலது பக்கமாக தும்பிக்கையை கொண்டுள்ள விநாயகர் என்றால் பூஜையின் போது விசேஷ கவனமும் பராமரிப்பும் செலுத்த வேண்டும். இவைகளை வீட்டில் செய்வது கடினம். அதனால் தான் இந்த சிலைகளை கோவில்களில் மட்டுமே பார்க்க முடியும்.
அதனால் வீட்டில் வைக்க வேண்டும் என்றால் இடது பக்கமாக அல்லது நேராக உள்ள அல்லது காற்றில் இருக்கும் தும்பிக்கையை கொண்ட விநாயகரை வைத்து வழிபடுங்கள். எல்லா நலங்களையும் சங்கடங்களை தீர்க்கும் அந்தகணபதி உங்களிற்கு வழங்குவார்…