மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ள செரீனா வில்லியம்ஸ், மரியா ஷரபோவா

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் செரீனா வில்லியம்ஸ், மரியா ஷரபோவா ஆகியோர் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.      

மகளிர் ஒற்றையர் பிரிவில் நடந்த இரண்டாவது சுற்று ஆட்டத்தில் தொடரின் , ஐந்தாம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் மரியா ஷரபோவா, பெலாரஸின் சாஸ்னோவிச்சை எதிர்த்து விளையாடினார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஷரபோவா, 6-2, 6-1 என்ற நேர் செட்களில் வெற்றியை வசமாக்கினார்.

ஒற்றையர் பிரிவில் நடந்த மற்றொரு போட்டியில் முதல் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், சீனத் தைபேயின் சு-வேய்-ஷே-வை எதிர்கொண்டார். இதில் 6-1, 6-2 என செரீனா எளிதில் வெற்றி பெற்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

ஆஸ்திரேலியஓபன் டென்னிஸ்செரீனா வில்லியம்ஸ்போட்டிமரியா ஷரபோவாமூன்றாவது சுற்று
Comments (0)
Add Comment