அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற உலக செஸ் போட்டியில், நிர்ணயிக்கப்பட்ட 12 சுற்றுகளின் முடிவில் கார்ல்சன் – கர்ஜாகின் ஆகிய இருவரும் தலா 6 புள்ளிகள் பெற்று சமநிலையில் இருந்ததால் டை பிரேக்கர் முறையில் வெற்றியாளரைத் தேர்ந்தெடுக்கும் முறை இன்று நடைபெற்றது.
இதில் முதல் இரண்டு சுற்றுகள் டிராவில் முடிவடைந்த நிலையில் அடுத்த இரு சுற்றுகளை கார்சல் வென்றார். 2-0 என்கிற புள்ளிக்கணக்கில் அவர் மூன்றாவது முறையாக உலக சாம்பியன் ஆகியுள்ளார். இதன் மூலம் செஸ் உலகில் தான் ஒரு தன்னிகரற்ற வீரர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.