மூன்று ஐ.நா நிபுணர்கள், ஒரு குழு இலங்கை வருகிறது!

 இலங்கையின் தற்போதைய மனித உரிமை நிலைமைகள், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை, பொறுப்புக்கூறல் செயற்பாடுகள் என்பன தொடர்பில் மதிப்பீடு செய்யும் நோக்கில் ஐக்கிய நாடுகளின் மூன்று விசேட நிபுணர்கள் இவ்வருடம் இலங்கை வரவுள்ளனர். அத்துடன் ஐக்கிய நாடுகளின் செயற்குழு ஒன்றும் இலங்கைக்கு வரவுள்ளது.

மனித உரிமையை பாதுகாப்பதற்கும் ஊக்குவிப்பதற்குமான விசேட நிபுணர் ஒருவர் இம்மாதம் இலங்கை வரவிருக்கிறார். சுதந்திரமாக கருத்துக்களை வெளிப்படுத்துவதை ஊக்குவிப்பதற்கும் பாதுகாப்பதற்குமான விசேட அறிக்கையாளர் ஒருவரும் மற்றும் உண்மை, நீதி நட்டஈடு, மீள்நிகழாமை தொடர்பான விசேட நிபுணர் ஒருவரும் இவ்வருடத்தில் இலங்கைக்கு வரவுள்ளனர். மேலும் பலவந்தமாக தடுத்து வைத்தல் தொடர்பான ஐக்கிய நாடுகளின் செயற்குழுவும் இவ்வருடம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இவ்வருடம் மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணையின் பிரகாரமே இலங்கை அரசாங்கம் இவ்வாறு ஐக்கிய நாடுகளின் விசேட நிபுணர்களுக்கும் செயற்குழுவுக்கும் அழைப்பு விடுத்துள்ளது

இலங்கைஐக்கிய நாடுஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்
Comments (0)
Add Comment