‘லா லிகா’ கால்பந்து லீக் போட்டி நேற்றுடன் முடிவடைந்தது. இதில் பார்சிலோனா அணி ரியல் மாட்ரிட் அணியை பின்னுக்குத் தள்ளி 24-வது முறையாக சாம்பியன்ஸ் பட்டத்தை வென்றது.
இந்த வெற்றிக்கு பார்சிலோனா அணியின் முன்னணி வீரர் சுவாரஸ் முக்கிய காரணமாக இருந்தார். அவர் நேற்று கிரேனடா அணிக்கெதிராக ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார். இதன்மூலம் இந்த லா லீக் தொடரில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார். சுவாரஸ் 2016 சீசனில் 40 கோல்கள் அடித்துள்ளார். அடுத்து பிஎஸ்ஜி அணியின் இப்ராஹிமோவிக் 36 கோல்கள் அடித்துள்ளார்.
கிறிஸ்டியானோ ரொனால்டோ 35-ம், மெஸ்சி 26 கோல்களும் அடித்துள்ளனர். கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து மெஸ்சி மற்றும் ரொனால்டோ ஆகியோர்தான் அதிக கோல்கள் அடித்து தங்க ஷூவை கைப்பற்றி வந்தனர். 7 ஆண்டுகள் வரை முறியடிக்கமுடியாத இந்த சாதனையை நேற்று சுவராஸ் முறியடித்தார். இதனால் மெஸ்சி மற்றம் ரொனால்டோ ஆகியோரின் ஆதிக்கம் முடிவுக்கு வந்துள்ளது.