மேற்கு இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மறைமுக நிர்பந்தம் காரணமாகவே ஓய்வு முடிவை எடுத்துள்ளதாக சந்தர்பால் விளக்கமளித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் பங்கேற்பதற்காக மேற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் தமக்கு தடையில்லா சான்றிதழை வழங்கியுள்ளது என குறிப்பிட்ட அவர், ஜனவரி 23- ஆம் திகதி தாம் அதிகாரபூர்வமாக ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட பிறகே அந்த சான்றிதழை அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தாம் ஓய்வு குறித்து அறிவிக்காவிட்டால் அவர்கள் தமக்கு அந்த சான்றிதழை தந்து இருக்கமாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேற்கு இந்திய அணிக்காக நீண்ட காலம் விளையாடியிருக்கும் தம்மை, இதை விட நன்றாக நடத்தியிருக்க வேண்டும் என்பதே தமது உணர்வு என்றார்.