மே 18 நினைவேந்தலில் அனைவரும் ஒன்று திரள‌ முள்ளிவாய்க்காலில் கலந்துரையாடல்…

மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை முள்ளிவாய்க்கால் மக்களுடன் இணைந்து ஏனைய தரப்பினர் நினைவேந்தவேண்டும் என்பதை கருப்பொருளாக கொண்டு, முள்ளிவாய்க்காலில் ஆரம்பகட்ட கலந்துரையாடல் இடம்பெற்றது. தமிழர் மரபுரிமைப்பேரவை , மாற்றத்துக்கான இளைஞர் அணி,முள்ளிவாய்க்கால் கிராம முன்னேற்ற சங்கம் மற்றும் பொதுமக்கள்,மதகுருமார்கள் பங்குகொண்டிருந்தனர்.

மேலும், மேற்படி நினைவேந்தலில் வடக்குக் கிழக்கு மாணவர்ஒன்றியங்கள் ,இளைஞர் அமைப்புக்கள் ,,,அரசியல் கட்சிகள்  ,பொதுமக்கள் என அனைவரும் இணைந்து ஓரணியில் நினைவேந்தலை ஒழுங்கமைப்பதற்காக எதிர்வரும் நாட்களில் ஒன்றுகூடல் நடைபெற இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பத்தாவது வருடத்தினை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்க அனைத்து தரப்பினரும் இணைந்து ஒற்றுமையுடன் அனுஷ்டிப்பதே தமிழரது தலையாய கடமையாகும்!அத்தோடு படுகொலைசெய்யப்பட்ட உயிர்களுக்கு நாம் வழங்கும் அஞ்சலியும் மரியாதையுமாக அமையும்.

அமைப்புமாணவர்முள்ளிவாய்க்கால்
Comments (0)
Add Comment