உலகின் மிகப்பெரிய சாப்ட்வேர் தயாரிப்பு நிறுவனமான மைக்ரோசாப்ட், சர்வர் கம்ப்யூட்டர்கள் என பிரத்யேகமாக பிராசஸர் தயாரிக்க முடிவு செய்துள்ளது. டேட்டா சென்டர்கள், நிறுவன கிளவுட் சேவைகளுக்கு என இது உருவாக்கப்பட்டு வருகிறது. இதுபோல், இந்த நிறுவன சர்பேஸ் லேப்டாப்களில் இன்டல் பிராசஸர்களுக்கு மாற்றாக சொந்த பிராசஸர் சிப் இடம்பெறும். இன்டல் பிராசஸர்களுக்கு போட்டியாக மைக்ரோசாப்ட் தயாரிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.