மைத்திரியை சந்திக்கின்றனர் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்!

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களது படுகொலை தொடர்பில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்க மாணவர் ஒன்றியத்தால் விடுக்கப்பட்ட கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.இதனையடுத்து கொழும்பில் நாளை (01-11-2016) இலங்கை ஜனாதிபதியை பல்கலைக்கழக மாணவ ஒன்றிய பிரதிநிதிகள் ,பல்கலைக்கழக துணைவேந்தர் சகிதம் சந்திப்பார்களென தெரியவந்துள்ளது.
இன்று யாழ்.பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்திருந்த மீள்குடியேற்ற அமைச்சர் மாணவர்கள், துணைவேந்தர் மற்றும் பீடாதிபதிகளுடனான சந்திப்பின் பின்னர் இத்தகவலை வெளியிட்டார். காலை பல்கலைக்கழக மாணவர்கள் சிலரது முரண்பாடுகளால் வெளிநடப்பு செய்திருந்த ஊடகவியலாளர்கள் பல்கலைக்கழகத்திற்கு வெளியே அமைச்சர் சுவாமிநாதனை சந்தித்திருந்த போதே அவர் இத்தகவலை வெளியிட்டிருந்தனர்.
பேச்சுக்களின் பின்னர் மாணவர்கள் தமது போராட்டத்தை விலக்கிக்கொண்டனர். இதனிடையே யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளரும் சிவில் சமூக அமையத்தின் பேச்சாளருமான கு.குருபரன் ஜனாதிபதியுடன் சந்திப்பு, கோரிக்கை முன்வைப்பு, உறுதிமொழி வழங்கல், க்ரூப் போட்டோ – ஜனவரி 8, 2015 க்குப் பின்னரான போராட்ட டிசைன் என தனது முகப்புத்தகத்தில் நிலைத்தகவல் பதிவொன்றை இது தொடர்பினில் வெளியிட்டுள்ளார்.

ஒன்றியம்கொழும்புஜனாதிபதிபல்கலைக்கழகம்மாணவர்கள்யாழ்ப்பாணம்ஸ்ரீலங்கா
Comments (0)
Add Comment