மைத்திரி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை!

மைத்திரி அரசாங்கத்திற்கு எதிரான முதலாவது நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை சமர்பிக்கப்படவுள்ளது.
ஸ்ரீலங்கா நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள   நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதமும் வாக்கெடுப்பும் இன்று இடம்பெறவுள்ளது.
கூட்டு எதிர்க் கட்சியினால் சபையில் இந்தப்பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.
2016ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கூறப்பட்ட விடயங்களுக்கு எதிராக செயற்பட்டமை உட்பட பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து இந்த பிரேரணை கொண்டுவரப்படவுள்ளது.
தினேஷ் குணவர்தன உட்பட கூட்டு எதிர்க் கட்சியிலுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 35 பேரின் ஒப்புதலுடன் சபாநாயகரிடம் நிதி அமைச்சர் தொடர்பான பிரேரணை ஒப்படைக்கப்பட்டு பல மாதங்கள் சென்றுள்ளன.
இதன்படி, இந்த பிரேரணை மீதான விவாதம் இடம்பெற்று பின்னர் இன்று மாலை 6.30க்கு வாக்கெடுப்பு நடாத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
அரசுகூட்டு எதிரணிநிதி அமைச்சர்பிரேரணைமைத்திரிவிவாதம்
Comments (0)
Add Comment