யாழில் இளம் பெண் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இளம் பெண் ஒருவர் அவரது வீட்டிலிருந்து இன்று சனிக்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்து பார்த்போது வீட்டுக் கதவுபூட்டப்பட்டிருந்தாகவும் தான் அழைத்தபோது எதுவித சந்தமும் இல்லாததால் கதவை உடைத்து வீட்டில் நுழைந்தபோது தனது மனைவி சடலமாகக் காணப்பட்டார் என்றும் அவரது கணவன் தெரிவித்தார்.அன்ரன் செலஸ்ரா (வயது 19) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

சம்பவ இடத்துக்கு சென்று விசாரணைகளை மேற்கொண்ட பதில் நீதிவான் மு.திருநாவுக்கரசு பிரேத பரிசோதனைக்காக சடலத்தை யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்னரே திருமணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரதுஇளம்ஒருவர்குருநகர்சடலமாகபகுதியில்பெண்மீட்கப்பட்டுள்ளார்.யாழ்ப்பாணம்வீட்டிலிருந்து
Comments (0)
Add Comment