இரண்டாம் இணைப்பு :
சந்தேக நபர் கைது?
சாவகச்சேரி மறவன்புலவு பகுதியில் வீடொன்றில் இருந்து தற்கொலை அங்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை மறைத்து வைத்திருந்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு தப்பியோடிய 31 வயதுடைய சந்தேகநபரை அக்கராயன் பகுதியில் வைத்து அக்கராயன் ஸ்ரீ பொலிஸார் இன்று புதன்கிழமை (30) கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முதலாம் இணைப்பு
சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மரவன்புலோ பிரதேச வீடொன்றிலிருந்து தற்கொலை அங்கியுடன் நான்கு கிளைமோர், C-4 வெடிமருந்து 4kb, 100 கைத்துப்பாக்கி ரவைகளை ஸ்ரீலங்கா பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது ..
ஸ்ரீலங்கா பொலிஸாருக்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கு அமைய அங்கு சோதனை நடவடிக்கைக்கு சாவகச்சேரி பொலிஸார் சென்றபோதே மேற்படி வெடிபொருட்களை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் அந்த வீட்டில் இருந்த சந்தேகநபர் பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் தப்பிச்சென்ற குறித்த சந்தேகநபரை ஸ்ரீ பொலிஸார் தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.