ஸ்ரீ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் தாமரை தடாகத்தில் நடைபெறவிருந்த நிகழ்வு ஒன்றுக்கான முன் ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டிருந்த போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாமரைத் தடாகம் அமைந்துள்ள பகுதியில் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் பெண்புலிப் போராளி ஒருவரின் சகோதரரான முருகையா சர்மலன் என்ற இந்த இளைஞனை கொழும்பு பிரதான நீதிவான் லால் ரணசிங்க எதிர்வரும் 17ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு நேற்று உத்தரவிட்டுள்ளார்.
சந்தேக நபரை சோதனையிட்ட போது அவரது தேசிய அடையாள அட்டைக்கு மேலதிகமாக, அவரது சகோதரியின் அடையாள அட்டையையும் அவர் வைத்திருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.