யாழில் பட்மிண்டன் விசேட பயிற்சி முகாம்

யாழ்ப்பாணத்தில் முதல் தடவையாக சிறுவர் மற்றும் பயிற்றுநர்களுக்கான பட்மிண்டன் விசேட பயிற்சி முகாமொன்று நடத்தப்பட்டது. இதற்காக 23 வருடங்களின் பின்னர் இலங்கை பட்மிண்டன் சம்மேளன உயர் அதிகாரிகள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தனர்.

சர்வதேச பட்மிண்டன் சம்மேளனத்தின் விதிமுறைகளுக்கு அமைவாக இலங்கை பட்மிண்டன் சம்மேளனம், யாழ். மாவட்ட பட்மிண்டன் சங்கத்துடன் இணைந்து இந்தத் திட்டத்தை முன்னெடுத்தது. சென். ஜோன்ஸ் கல்லூரியின் உள்ளக அரங்கில் நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பயிற்சி முகாமில் 10 முதல் 14 வயதுக்குட்பட்ட சுமார் 108 வீர, வீராங்கனைகள் கலந்துகொண்டனர். அவர்களுக்கு சட்டல் டைம் திட்டத்தின் பிரகாரம் பட்மிண்டன் விளையாட்டின் அடிப்படை நுணுக்கங்கள் கற்றுக்கொடுக்கப்பட்டன.

இதேவேளை, 36 பயிற்றுநர்களின் பங்களிப்புடன் பயிற்றுநர்களுக்காக பயிற்சிப்பாசறை ஒன்றும் முன்னெடுக்கப்பட்டிருந்தது. பயிற்சி முகாமில் கலந்துகொண்ட வீர, வீராங்கனைகளுக்கும், பயிற்றுநர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

சம்மேளனம்சிறுவர்பட்மிண்டன்முகாம்யாழ்ப்பாணம்விசேடபயிற்சி
Comments (0)
Add Comment