அழகுத் தெய்வமான முருகப் பெருமானைக் குறித்து அனுஷ்டிக்கப்படும் முக்கிய
விரதங்களில் ஒன்றான கந்த சஷ்டி விரதம் நேற்றைய தினம்(08-11.2018)ஆரம்பாகியுள்ளது.
யாழ்.குடாநாட்டிலுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆலயங்களான நல்லூர்க் கந்தசுவாமி கோயில், தொண்டமானாறு செல்வச் சந்நிதி ,
மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயம் உட்பட முருகன் ஆலயங்களிலும், ஏனைய பல ஆலயங்களிலும் விசேட அபிஷேக பூசைகளுடன் கந்த சஷ்டி விரத காலம் ஆரம்பமானது.
அந்தவகையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தில் நேற்று பிற்பகல் விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றதுடன் முருகப் பெருமான் வீதி வலம் வந்தும் பக்தர்களுக்கு அருள் பாலித்துள்ளார்.