யாழ்ப்பாணம் மீசாலை பகுதியில் புனர்வாழ்வு பெற்ற நிலையில் விடுதலையான நிலையில் வாழ்ந்து வந்த முன்னாள் போராளி ஒருவரை பயங்கரவாதத் தடுப்பு புலனாய்வுப் பிரிவினரான ரீ.ஐ.டியினர் கைதுசெய்து அழைத்துச் சென்றுள்ளனர்.
நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு இந்த கைது இடம்பெற்றுள்ளது . மீசாலை வடக்கில் வசித்து வரும் 26 வயதுடைய மகிந்தன் என்பவரே ரீ.ஐ.டியினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் பெருமாள் கோயிலடியைச் சேர்ந்த இவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளியும் ஆவர். யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டதன்பின்னர் விடுவிக்கப்பட்டிருந்த இவர் திருமணம் செய்து மீசாலையில் வசித்து வருகின்றார்.
இந்நிலையிலேயே நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு அவரின் வீட்டுக்குச் சென்ற பயங்கரவாத தடுப்புப் பிரிவூப் பொலிஸார் மகிந்தனை கைது செய்வதற்கான காரணம் எதுவும் கூறாமல் அவரை கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.