யாழ் வலிவடக்கு தெல்லிப்பழை வீமன்காமத்திலுள்ள பாவனையற்ற கிணற்றிலிருந்து பெருந்தொகை கைக்குண்டுகள் இன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெல்லிப்பழை வீமன்காமன் பிரதேசத்தில் இன்று காலை கிணறு ஒன்றை சுத்தம் செய்தபோதே இந்த கைக்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
குறித்த விடயம் தொடர்பில் தெல்லிப்பழைப் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, கண்ணி வெடி அகற்றும் அரச சார்பற்ற அமைப்பின் அதிகாரிகளும், பொலிஸாரும் கிணற்றை சோதனையிட்டுள்ளனர்.
இதன்போது குறித்த கிணற்றினில் இருந்து 40 கைக்குண்டுககளை மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.