ரியல் மட்ரிட் அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவை, அந்த அணி விற்கக்கூடாது என, அந்தக் கழகத்தின் தலைவர் பாசோ ஜென்டோ தெரிவித்துள்ளார்.
ரொனால்டோ தொடர்பாக ஜென்டோ தெரிவிக்கையில்- ரியல் மட்ரிட் சார்பாகத் தனது பெயரை நிலைநாட்டியுள்ள ரொனால்டோ, உலகின் முன்னணி வீரர்களுள் ஒருவராகவும் காணப்படுகிறார். ஆனால், ரியல் மட்ரிட் கழகத்திலிருந்து அவர் விலகலாம் என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக, பரிஸ் செயின்ட் ஜேர்மன் அணிக்கோ அல்லது ரொனால்டோவின் முன்னாள் கழகமான மன்செஸ்டர் யுனைற்ரெட் கழகத்துக்கோ அவர் செல்லலாமெனச் சொல்லப்படுகிறது. ரியல் மட்ரிட் ரொனால்டோவை விற்கக்கூடாது.
ஒவ்வொரு நாளும் உங்களுடைய கழகத்துக்காகப் பல கோல்களைப் பெற்றுத்தரும் ஒரு வீரரை, நீங்கள் எவ்வாறு விற்கப்போகிறீர்கள்? இல்லை, இல்லை. அத்தோடு, விற்கும் கழகமாக ரியல் மட்ரிட் எப்போதும் இருந்ததில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, வீரர்களை ரியல் மட்ரிட் வாங்கியிருந்தது. மட்ரிட் விற்கக்கூடாது, அவர்கள் வாங்க வேண்டும். இங்குள்ள மக்களை கிறிஸ்டியானோ அறிவார். இந்தக்கழகத்தின் அதிகாரிகள் அவரை அதிகம் விரும்புகின்றனர் என்றார்.