லோதா கமிட்டியின் பரிந்துரைகளால் இந்திய கிரிக்கெட் வாரியம் ரூ.1600 கோடி அளவுக்கு வருவாய் இழப்பை சந்திக்க போகிறது. தற்போது இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு வருடம் ரூ. 2000 கோடி அளவுக்கு வருவாய் வந்து கொண்டுள்ளது.
தொலைக்காட்சிகளில் போட்டிகளை ஒளிபரப்ப அளிக்கப்படும் உரிமம், வி்ளம்பரங்கள் உள்ளிட்டவை மூலம் தான் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு இந்த மிகப் பெரிய வருவாய் கிடைக்கிறது. இந்த நிலையில் போட்டிகளை ஒளிபரப்பும் போது விடப்படும் விளம்பர இடைவேளைகளைக் குறைக்குமாறு லோதா கமிட்டி உத்தரவிட்டுள்ளது. இது இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு பெரிய அடியாக உள்ளது. லோதா கமிட்டியின் பரிந்துரைகளை கிரிக்கெட் வாரியம் அமல்செய்தே ஆக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
இதை பிசிசிஐ அமல்படுத்தினால் ஆண்டுக்கு ரூ.2000 கோடி உள்ள வருவாய் ரூ.400 கோடியாக சரிய வாய்ப்பு உள்ளது. இதனால் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செய்ல்பாடுகள் அடியோடு பாதிக்கப்படும். தற்போது உலகிலேயே பணக்கார கிரிக்கெட் விளையாட்டு அமைப்பு பிசிசிஐ தான். லோதா கமிட்டியின் பரிந்துரைகளை கிரிக்கெட் வாரியம் அமல்படுத்தும் பட்சத்தில் அந்த அந்தஸ்து பறி போகும் வாய்ப்பும் உள்ளது.