‘இந்தச் செயலணிக்கு அமைச்சர்கள் ரிசாத் பதியுதீன் மற்றும் பெசர் முஸ்தபா ஆகியோர் இணைத் தலைவர்களாக இருப்பார்கள். 1980களில் இருந்து, தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் வடக்கில் இருந்து இடம்பெயர்ந்தனர். அவர்கள், போரின் முடிவில் சொந்த இடங்களுக்குத் திரும்பத் தொடங்கினர். எனினும், அவர்கள் அனைவருக்கும் மீளக் குடியேறுவதற்குப் போதிய உட்கட்டமைப்பு வசதிகள் இருக்கவில்லை.
வடக்கு மாகாணத்தில் முஸ்லிம்களுக்கு 16,120 வீடுகளும், சிங்களவர்களுக்கு 5543 வீடுகளும் தேவைப்படுகின்றன.
இடம்பெயர்ந்த மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை உள்ளிட்ட அரசியல் உரிமைகள் கிடைக்கவில்லை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்