வடக்கு சுகாதாரத் தொண்டர்கள் அனைவருக்கும் மீளவும் நேர்முகத் தேர்வு – ஆளுநர் அறிவிப்பு

வடக்கு மாகாண சுகாதாரத் தொண்டர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கான நேர்முகத் தேர்வில் தவறுகள் இடம்பெற்றது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதால் அதனை மீளவும் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

இதற்கு அமைய எதிர்வரும் 3 வாரங்களுக்குள் ஆயிரத்து 924 சுகாதாரத் தொண்டர்களையும் மீள அழைத்து தகுந்த வகையில் நேர்முகத் தேர்வுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கெனவே நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வின் அடிப்படையில் நிரந்தர நியமனத்துக்கு தெரிவானவர் களையும் நேர்முகத் தேர்வில் அநீதி இழைக்கப்பட்டதாக தெரிவித்த தரப்பினரையும் இணைத்து இன்று நடத்திய கலந்துரையாடலை அடுத்த ஆளுநர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.


தேர்வு
Comments (0)
Add Comment