வடக்கு முதல்வருக்கு எதிராக கூட்டு சதி?

இலங்கை அரசின் மாகாணசபைகளிற்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதம் எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில் முதலமைச்சரிற்கு எதிராகவும் அதே வேளை வடமாகாணசபையினை கலைத்துவிடுமாறு வலியுறுத்தியும் சில நகர்வுகள் முன்னெடுக்கப்படலாமென தகவல்கள் வெளியாகியுள்ளது. அரச தரப்பு மற்றும் மஹிந்த தரப்புடன் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் இக்கூட்டு சதி முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை அரசின் வரவு-செலவுத்திட்டத்தின் மீதான விவாதங்கள் தற்போது நடந்துவருகின்ற நிலையில் எதிர்வரும் 3ம் திகதி சனிக்கிழமை மாகாணசபைகளிற்கான நிதி ஒதுக்கீடு பற்றிய விவாதம் நடைபெறவுள்ளது. சர்வதேச உதவி அமைப்புக்களினால் வடக்கிற்கு ஒதுக்கப்பட்டுள்ள மூவாயிரம் மில்லியன் நிதியையும் இலங்கை அரசு வடக்கிற்கான மொத்த நிதி ஒதுக்கீட்டினுள் உள்ளடக்கி வரவு செலவு திட்டத்தை சமர்ப்பிக்கவுள்ளது. இதனையே தென்னிலங்கை தரப்புக்கள் வடமாகாணத்திற்கு மைத்திரி-ரணில் அரசு கூடிய நிதியை ஒதுக்குவதாக பிரச்சாரம் செய்துவருகின்றன.
இந்நிலையில் சனிக்கிழமை விவாதத்தின் போது முதலமைச்சரிற்கு எதிராக சதியினை அரங்கேற்ற ஆளும் தரப்புடன் , மஹிந்த மற்றும் தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இணைந்து கடுமையான முயற்சிகளை முன்னெடுத்துவருவதாக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

கூட்டமைப்புகூட்டு எதிரணிசதிதாயகம்மகிந்தமாகாணம்முதல்வர்வடக்குவிக்கினேஸ்வரன்
Comments (0)
Add Comment