வடபழனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பாரிய தீ விபத்து: 4 பேர் பலி

சென்னையில் உள்ள வடபழனி தெற்கு சிவன் கோவில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் இன்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டுள்ளது.   குடியிருப்பு பகுதியின் கீழ் தளத்தில்  நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் முதலில் பற்றிய  தீ, அங்கிருந்த வீடுகளுக்கும் பரவியது.

 உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதிகாலை நேரம் என்பதால் மக்கள் அனைவரும் உறங்கி கொண்டிருந்தனர். புகை மூட்டம் காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஒரே குடும்பத்தைச்சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.

மேலும் பாதிக்கப்பட்ட 5 பேருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தீ விபத்தில் 10க்கும் மேற்பட்ட  இருசக்கர வாகனங்கள் கருகின. மின்சார பெட்டியில் ஏற்பட்ட தீ பிறகு இருசக்கர வாகனங்களுக்கு பரவியதாக கூறப்படுகிறது. தீயால் ஏற்பட்ட கடும் புகைமூட்டம் அடுத்தடுத்த மாடிகளுக்கு பரவியதால் குடியிருப்பு வாசிகளுக்கும் கடும் சிரமம் ஏற்பட்டது.

அதிகாலை வேளையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழப்பு நிகழ்ந்திருப்பது அப்பகுதியில் உள்ள மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

அடுக்குமாடி குடியிருப்புஉயிரிழப்புசிகிச்சைதீ விபத்துதீயணைப்பு துறைவடபழனி
Comments (0)
Add Comment