வடமாகாணத்தின் தலைமையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

முள்ளிவாய்க்கால் மண்ணில் இறுதிப்போரில் ஸ்ரீலங்கா இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட தாயக மக்களின் நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் 18ம் திகதி வடமாகாணசபையினால் ஒழுங்கு செய்யப்படும் என்றும் இதுகுறித்து எதிர்வரும் 9ம்திகதி பேசப்படும் எனவும் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார்..
“முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் படுகொலை செய்யப்பட்ட மக்களின் நினைவாக இறுதிப் போர் நடைபெற்ற மண்ணில் மே-18ம் திகதி நினைவு கூரல் நிகழ்வுகளை நடத்தி வருகின்றோம்.
இந்த வருடமும் மே-18ம் திகதி நினைவு கூரல் நடத்தப்படும். இது தொடர்பாக முதலமைச்சருக்கு சில விடயங்கள் கூறப்பட்டுள்ளன.
எதிர்வரும் 9ம் திகதி நடைபெறவுள்ள வடமாகாணசபை அமர்வின் பின்னர் இந்த நினைவுகூரல் நிகழ்வு தொடர்பாக பேசுவதற்கும் தீர்மானித்திருக்கின்றோம். கடந்த வருடத்தை போல் இந்த வருடமும் நினைவு கூரல்நிகழ்வு நடக்கும் என அவர் தெரிவித்தார்.

இனபப்டுகொலைஇராணுவம்நிகழ்வுநினைவேந்தல்படுகொலைமுள்ளிவாய்க்கால்வடமாகாணம்
Comments (0)
Add Comment