வட முதல்வர் தமிழர்களை போருக்கு தயார்படுத்துகிறாராம்? ஹெல உறுமைய

வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் தமிழ் மக்களை மீளவும் போருக்கு இட்டுச் செல்கின்றார் என இனவாதக்கட்சியான  ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தேசிய அமைப்பாளர் நிசாந்த சிறி வர்னசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

விக்னேஸ்வரன் தமிழ் மக்களை மீளவும் நந்திக்கடலுக்குள் தள்ளி விடுகின்றார். விக்னேஸ்வரன் தமிழ் மக்களை போரில் மூழ்கடிக்கப்பார்க்கின்றார்.

தமிழ் மக்களின் கனவு வடக்கின் அபிவிருத்தியாகும். முதலமைச்சர் அதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். புத்திஜீவியான விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் வருத்தமளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

விக்னேஸ்வரனின் செயற்பாடுகளை நாம் கண்டிக்கின்றோம். எழுக தமிழ் போராட்டத்தின் ஊடாக தமிழ் மக்களை அவர் எங்கிருந்து அழைத்துச்செல்கின்றார்.

வடக்கில் வாழ்ந்து வந்த 21000 சிங்கள மக்களுக்கு என்னவாயிற்று? வடக்கிலிருந்து சிங்கள முஸ்லிம் மக்கள் விரட்டியடிக்கப்பட்டனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சிங்கள தமிழ் மக்களுக்கு இடையில் பிரிவிணையை ஏற்படுத்தப்பட்டுள்ளதாகத் நிசாந்த சிறி வர்னசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

இனவாதக்கட்சிசிங்கள ஊடகம்சிங்கள மக்கள்தமிழர்கள்முதல்வர்யுத்தம்வடக்குவிக்கினேஸ்வரன்
Comments (0)
Add Comment