வண்ணன் இளைஞர் கழகத்தின் 2018 ஆம் ஆண்டிற்கான youth with telant வேலைத்திட்டத்தின் ஆரம்பா விழா.15.07.2018 ஆம் திகதி காலை 10.00 மணியளவில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் ஏற்பாடு செய்யப்பட்ட அடிக்கல் நாட்டும் நிகழ்வினை விருந்தினராகக் கலந்திருந்த திருமதி.E.தேவகி(கிரமசேவைஉத்தியோகத்தர் )அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.
தொடர்ந்து விருந்தினர் உரைகள் இடம்பெற்றது.
அத்தோடு இந் நிகழ்வின் விருந்தினர்களாக திருமதி.E.தேவகி(கிரம சேவை உத்தியோகத்தர்) திரு.அ.விஜிதரன் (இளைஞர் சேவை அதிகாரி,புதுக்குடியிருப்பு),திரு.த.இரதீசன்(இளைஞர் சேவை அதிகாரி கரைத்துறைப்பற்று)ஆகியோரும் மற்றும் கிராமமட்ட அமைப்புக்களின் உறுப்பினர்கள் அறநெறி பாடசாலை சமூகத்தினர் கிராம மக்கள் , இளைஞர்கள் ஆகியோரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.