வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகை அம்மன் பொங்கல் உற்சவம் ஆரம்பம்

 வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் இன்று காலை முள்ளியவளை காட்டாவிநாயகர் ஆலயத்திலிருந்து மடப்பண்டம் எடுத்துவரப்பட்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது

கடந்த 14 ம் திகதி பாக்குதெண்டல் உட்சவத்தோடு ஆரம்பமான உட்சவம் ஆரம்பமாகி கடந்த 21 ம் திகதி  உப்பு நீரில் விளக்கெரியும் அன்னைக்கு தீர்த்தம் எடுக்கும் வைபவம் முல்லைத்தீவு கள்ளப்பாடு தீர்த்தக்கரை பகுதியில்  இடம்பெற்றது

முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயத்திலிருந்து தீர்த்தகுடம் எடுத்து செல்லப்பட்டு முல்லைத்தீவு கள்ளப்பாடு தீர்த்தக்கரை பகுதியில்  தீர்த்தம் எடுக்கப்பட்டு மீண்டும் முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயம் சென்று அங்கு உப்புநீரில் விளக்கு எரிக்கப்படுவதோடு  எதிர்வரும்  நேற்று ஞாயிறு (27) வரை வழிபாடுகள் நடைபெற்று நேற்று ஞாயிறு (27) முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயத்தில் பொங்கல் இடம்பெறது

அதனை தொடர்ந்து இன்று  திங்கட்கிழமை (28) அதிகாலை முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயத்திலிருந்து வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்துக்கு  மடப்பண்டம் எடுத்துவரப்பட்டு ஆலயத்தில் விசேட பொங்கல் வழிபாடுகள் இடம்பெறுவது வழமையாக காணப்படுகின்றது

அந்தவகையில் இன்று  திங்கட்கிழமை (28) அதிகாலை முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயத்திலிருந்து வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்துக்கு  மடப்பண்டம் எடுத்துவரப்பட்டு ஆலயத்தில் விசேட பொங்கல் வழிபாடுகள் ஆரம்பமாகியுள்ளன

கண்ணகி அம்மன்பொங்கல் வழிபாடுகள்முல்லைத்தீவுவற்றாப்பளை
Comments (0)
Add Comment