வரலாற்று சிறப்பு மிக்க ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய தேர்த்திருவிழா…

முல்லைத்தீவு மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு மிக்க ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய மகோற்சவ ஆண்டு திருவிழா நிகழ்வு கடந்த 1 3 ம் திகதி கொடியேற்றத்துடன் ஆலயத்தின் திருவிழா நிழக்வுகள் சிறப்புற நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது

அந்தவகையில் நேற்று  26.06.18 அன்று தேர்த்திருவிழா சிறப்புற நடைபெற்றுள்ளது

மாலை 3.30 மணியளவில் ஆலயத்தில் பூசை வழிபாடுகளை தொடர்ந்து விநாயகர் ஒரு தேரிலும் பூலோக நாயகி சமேத வேகாவனேஸ்வரர் ஆக வீற்றிருக்கம் தான்தோன்றீஸ்வரர் ஒரு தேரிலும்முருகன் ஒரு தேரிலும் ஏறி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்

பலஆயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோசம் முழங்க  தேர் இழுக்கப்பட்டு வழிபாடுகள் சிறப்புற நடைபெற்றுள்ளது.

ஒட்டுசுட்டன்தாந்தோன்றீச்சரர்நிகழ்வுரதோற்சபம்
Comments (0)
Add Comment