வலி வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள மக்களின் 700 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பலாலி, வறுத்தலைவிளான், கட்டுவன் சந்தி அச்சுவேலி வீதி, கட்டுவன்- மயிலிட்டி வீதி அதனைச் சுற்றியுள்ள காணிகள், மயிலிட்டி துறைமுகத்துக்கு முன்னாள் உள்ள காணிகள் என்பன இவ்வாறு விடுவிக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது..
குறித்த பகுதிகளில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட முட்கம்பி வேலிகள், முகாம்கள் என்பவற்றை அகற்றும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாகவும்ன் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த காணிகள் எதிர்வரும் புத்தாண்டு தினத்தன்று மக்களிடம் கையளிக்கப்படும் எனவும் எதிர் பார்க்கப்படுகிறது.
அன்றைய தினம் பருத்தித்துறை – பொன்னாலை வீதியும் முழுமையாக மக்களின் பாவனைக்குத் திறந்து விடப்படவுள்ளதாகவும் கூறப்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.