ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சில அமைச்சர்கள் ஆணையாளர் அல் ஹூசைன் யாழ்ப்பாணம் திருகோணமலை ஆகிய மாவட்டங்களுக்குச் சென்றமை தொடர்பாக அதிருப்பதியடைந்துள்ளனர். ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் சிலரும் விரும்பவில்லை. இது தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் மூத்த அமைச்சர்கள் சிலர் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு வாதாடியதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.
குறிப்பாக போர்க்குற்ற விசாரணையில் சர்வதேச நீதிபதிபதிகள், சர்வதேச நிபுணர்கள் ஆகியோர் அடங்கிய கலப்புமுறை நீதிமன்றத்திற்கு அரசாங்கம் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என்றும் உள்ளக பொறிமுறை ஒன்றின் மூலமே போர்க்குற்ற விசாரணைகள் நடத்தப்படும் என்பதை ஆணையாளர் அல் ஹூசைனிடம் அரசாங்கம் வற்புறுத்த வேண்டும் எனவும் அமைச்சர்கள் சிலர் வாதிட்டுள்ளனர்.