களுத்துறை பொலிஸ் பயிற்சி கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் வடக்கு-கிழக்கில் உள்ள மக்கள் அறிந்து வைத்திருந்த விடுதலைப்புலிகளின் காவற்றுறையினரை விடவும் எமது சிறிலங்கா பொலிஸார் வித்தியாசமானவர்கள், நல்லவர்கள் என நிரூபிக்க வேண்டும்.
.பயிற்சி பெற்று வெளியேறும் அனைவரையும் வடக்கு மற்றும் கிழக்கில் சேவைக்கு அமர்த்த விரும்புகின்றோம். எனவே பயிற்சி முடித்து வெளியேறும் அனைவரும் வடக்கு-கிழக்கில் வாழும் மக்களுக்கு சிநேகபூர்வமான சேவையினை வழங்குவது முக்கியமானது என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை, கல்லூரியிலிருந்து 240 தமிழ் கனிஷ்ட பொலிஸ் அதிகாரிகளும் 233 தமிழ் கனிஷ்ட கான்ஷ்டபிள்கள் வெளியேறியுள்ளனர்.
அண்மைக் காலங்களில் சிறிலங்கா காவல்துறை பல ஊழல்களை தமிழர் தாயகத்தில் செய்து வருவதை ஆதாரங்களுடன் பிடித்திருந்தார்கள். அதன் பின்னணியிலே இதனை உளறியிருக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. மேலும் உண்மை என்னவென்றால் தமிழர் தாயக பகுதியில் நடைபெறும் கொலை,கொள்ளை இலஞ்சம், ஆள்க்கடத்தல், சமுக சீரழிப்பு என்பன வற்றிற்கும் பின்னணியிலும் சிறிலங்கா காவல்துறையே இருக்கின்றது என்பதும் உலகறிந்த உண்மை. இந்த நிலையில் சிறிலங்கா அதிகாரியின் கூற்று வேடிக்கையாக உள்ளது.