விடுதலைப்புலிகளுடன் தொடர்பில் இருந்தாக கூறி தட்டிக்கழிக்கப்படும் தமிழ் இளைஞர் யுவதிகள்!

புலிகளுடன் தொடர்பு இருப்பதாக கட்டுக்கதைகளைக் கூறி பொலிஸ் சேவைக்கு தமிழ் இளைஞர் யுவதிகளை ஆட்சேர்ப்பு செய்யாமல் அரசாங்கம் இழுத்தடித்து வருவதாக வடமாகாண முதலமைச்சர் சி. வி.விக்னேஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார்.
“வடக்கில் 95 வீதமான சிங்களப் பொலிசாரே பணியாற்றுகின்றனர். தமிழர்கள் பொலிஸ் சேவையில் சேர்த்துக் கொள்ளப்படுவதில் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றனர்.
பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டாலும், தமிழ் இளைஞர் யுவதிகளை ஆட்சேர்ப்பு செய்வதில் இழுத்தடிப்பு நடக்கிறது. புலிகளுடன் தொடர்பு என்று கட்டுக்கதை கூறி தட்டிக்கழிக்கின்றனர்” என்றும் அவர் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.

இளைஞர்தமிழ்முதலமைச்சர்யுவதிகள்விக்கினேஸ்வரன்விடுதலைப்புலிகள்வேலைவாய்ப்பு
Comments (0)
Add Comment