விடுதலைப்புலிகள் மீள உருவாகிறார்கள் என்பது முற்றிலும் பொய்!

சிங்­கள ஊட­கங்கள் தமி­ழீழ விடு­தலை புலிகள் இயக்கம் தலை­தூக்­கி­யுள்­ள­தாக கூறி வரு­கின்­றன. எனினும் எனக்கு தெரிந்த வரையில் புலிகள் அழித்­தொ­ழிக்­கப்­பட்டு விட்­டனர். இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் மற்றும் இரா­ணுவ புல­னாய்வு பிரி­வினர் விசா­ரணை செய்த போது புலிகள் இயக்கம் இனிமேல் தலை­தூக்­காது என்றே கூறி­னர் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார்.

என்னை சிலர் தேச தூரோகி , புலி என்றும் உங்­களால் வெற்றி பெறவே முடி­யாது, நீங்கள் அர­சி­ய­லி­ருந்து ஒதுங்­குங்கள் என்றும் கூறினர். ஆனால் நான் வெற்றி பெற்று காட்­டினேன். தற்­போது ஊடங்­க­ளுக்கு பூரண சுதந்­தி­ரத்தை வழங்­கி­யுள்ளோம். ஆனாலும் ஊடகங்கள் பழைய யுகத்தை நோக்கி பய­ணிக்­கவே முனை­கின்­றன. அந்த பய­ணத்­தையே நீங்கள் விரும்­பினால் அதற்கும் நாங்கள் தயா­ரா­கவே உள்ளோம் .ஊடக சுதந்­தி­ரத்­திற்­காக அர­சாங்­கமே போராடி வரு­வ­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.

வடக்கு ஊட­க­வி­ய­லா­ளர்­களை தமி­ழர்கள் என்று ஒதுக்­கி­னாலும் பிரகீத் எக்­ன­லி­ய­கொட என்ன தவறு செய்தார்? அவ­ரையும் விடு­தலை புலி என்றே கூறினர். இதற்கு என்ன செய்­வது என்றும் பிர­தமர் சுட்­டிக்­காட்­டினார்.

சர்­வ­தேச பத்­தி­ரிகை சுதந்திர தினத்தை முன்­னிட்டு கொழும்பு ல­க்ஷமன் கதிர்­காமர் மத்­திய நிலை­யத்தில் நேற்று நடை­பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே பிர­தமர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அங்கு ஸ்ரீ பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மேலும் உரை­யாற்­று­கையில்,

தகவல் அறியும் சட்­ட­மூலம் நிறை­வேற்­றப்­பட தயா­ராக இருக்கும் தரு­ணத்­தி­லேயே இம்­முறை சர்­வ­தேச பத்­தி­ரிகை தினத்தை கொண்­டா­டு­கின்றோம். 2003 ஆம் ஆண்டு எனது ஆட்­சியின் போது தகவல் அறியும் சட்­ட­மூலம் கொண்டு வரு­வ­தற்கு நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்ட போதிலும் என்னால் முடி­ய­வில்லை. ஊட­கங்­களின் சுதந்­தி­ரத்­திற்­காக நான் செயற்­பட்ட போது சில ஊட­க­வி­ய­லா­ளர்கள் உங்­களால் ஆட்சி அமைக்க முடி­யாது. நீங்கள் அர­சி­ய­லி­ருந்து ஒதுங்­குங்கள் என்று கூறினர். அதே­போன்று என்னை தேச­து­ரோகி , புலி கூறாத எந்த பத்­தி­ரி­கை­யா­வது இலங்­கையில் உள்­ளதா? ஆனாலும் இதற்கு செவி­ம­டுத்து நான் சென்­றி­ருந்தால் என்ன நடந்திருக்கும். ஆனால் பொறு­மை­யாக இருந்து வெற்­றிப்­பெற்று காண்­பித்தேன்.

தற்­போது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் இணைந்து தகவல் அறியும் சட்­ட­மூ­லத்தை கொண்டு வரு­வ­தற்கு பிர­த­ம­ராக எனக்கு வாய்ப்பு கிடைத்­துள்­ளது. அர­சாங்­கத்தின் தரப்­பினால் ஊட­கங்கள் சுதந்­தி­ர­மாக செயற்­ப­டு­வ­தற்கு முழு­மை­யான ஒத்­து­ழைப்­பினை வழங்­குவோம்.

தற்­போது புதிய அர­சி­ய­ல­மைப்­பிற்­கான நட­வ­டிக்­கை­களை ஆரம்­பித்­துள்ளோம். இதன்­போது அடிப்­படை உரிமை பலப்­ப­டுத்­தப்­படும். இதன்­போது ஊடக சுதந்­தி­ரமும் பலப்­ப­டுத்­தப்­படும். இதற்­கான நிய­மிக்­கப்­பட்ட அர­சி­ல­மைப்பு பேரவை தொடர்பில் நட­வ­டிக்கை குழு இன்­றைய தினம் (நேற்று) கூட­வுள்­ளது. அர­சி­ய­ல­மைப்பு நட­வ­டிக்­கை­களின் போது ஊட­கங்கள் உரி­ய­வ­கையில் பங்­க­ளிப்பு செய்ய வேண்டும். மக்­க­ளுக்கு விசு­வா­ச­மான முறையில் ஊட­கங்கள் செயற்­பட வேண்டும். ஆனாலும் மீள யுத்­த­மொன்றை ஏற்­ப­டுத்­து­வ­தற்கே முனை­கின்­றனர். இருந்­த­போ­திலும் என்­னு­டைய தக­வல்­களை ஊட­கங்­க­ளினால் பெற­மு­டி­யாது.

இந்­நி­லையில் எதிர்க்­கட்சி தலைவர் உரை­யாற்றும் போது யாழ்ப்­பா­ணத்தில் ஊட­க­வி­ய­லாளர் பலர் கொல்­லப்­பட்­டனர். ஊடக நிறு­வ­னங்கள் தாக்­கப்­பட்­ட­தாக கூறினார். ஆனாலும் நல்­லாட்சி அர­சாங்கம் ஆட்சி வந்­த­வுடன் அவ்­வா­றான செயல்கள் இடம்­பெ­ற­வில்லை. உதயன் பத்­தி­ரிகை நிறு­வனம் தீயிட்டு கொழுத்­தப்­பட்­டது. ஊடக சுதந்­தி­ரத்­திற்­கா­கவே உதயன் பத்­தி­ரிகை செயற்­பட்­டது.

ஆனாலும் வடக்கு ஊட­க­வி­ய­லா­ளர்­களை தமி­ழர்கள் என்று நாம் புறந்­தள்ளி விடுவதாக வைத்துக்கொள்வோம். அவ்­வாறு பிரித்து செயற்­ப­டு­வ­து­தானே ஊட­கங்­களில் செயற்­பாடு.? அவ்­வாறே நாமும் செயற்­பட்­டாலும் அப்­ப­டி­யானால் பிரகீத் எக்­ன­லி­ய­கொ­ட­விற்கு என்ன நடந்­தது? அவரை புலிகள் என்றே கூறினர். அவ்­வாறு சிங்­கள ஊட­கங்­களே கூறின. பிரகீத் எக்­ன­லி­கொட உண்­மைக்­காக செயற்­பட்­ட­வ­ராகும். எனினும் பிரகீத் எக்­ன­லி­கொட பற்றி பேசும் போது இரா­ணு­வத்தை காட்­டி­கொ­டுப்­ப­தாக கூறினர்.

அத்­துடன் தற்­போது சிங்­கள ஊட­கங்கள் தமி­ழீழ விடு­தலை புலிகள் இயக்கம் தலை­தூக்­கி­யுள்­ள­தாக கூறி வரு­கின்­றன. எனினும் எனக்கு தெரிந்த வகையில் புலிகள் அழித்­தொ­ழிக்­கப்­பட்டு விட்­டனர். இருந்­த­போ­திலும் இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் மற்றும் இரா­ணுவ புல­னாய்வு பிரி­வினர் விசா­ரணை செய்த போது புலிகள் இயக்கம் இனிமேல் தலை­தூக்­காது என்றே கூறினர்.

ஆனாலும் இத­னுடன் சில அர­சியல் குழுக்கள் செயற்­பட்டு வரு­கின்­றன. துட்­டகை முனு என்று தன்னை அடை­யா­ளப்­ப­டுத்த கூடிய மஹிந்த ராஜ­ப­க்ஷவின் காலத்­திலும் விடு­தலை புலிகள் இயக்கம் இருந்­தது. அந்த அரசன் விடு­தலை புலி­க­ளுடன் ஒப்­பந்தம் செய்து கொண்டார். அர­ச­ருக்கு விடு­தலை புலி­க­ளுடன் ஒப்­பந்தம் செய்ய முடியும்.

எவ்­வா­றா­யினும் ஊடக சுதந்­தி­ரத்­திற்கு நாம் தயா­ரா­கவே உள்ளோம். ஆனாலும் ஊடங்கள் பழைய யுகத்தை நோக்கி பய­ணிக்­கவே முனை­கின்­றன. அந்த பய­ணத்­தையே நீங்கள் விரும்­பினால் அதற்கும் நாங்கள் தயாராகவே உள்ளோம் . அதற்காக எம்மால காலை முதல் மாலை வரைக்கும் செயற்பட முடியும்.அதேபோன்று ஹிட்லரின் காலத்தின் பின்னர் ஜனநாயகவாதிகளுக்கு சுதந்திரமாக செயற்பட முடியாது என்ற சட்டம் உள்ளடக்கப்பட்டது. அதனை இலங்கை அரசியலமைப்பில உள்ளடக்க முடியும்.

இந்நிலையில் தற்போது ஊடக சுதந்திரத்திற்காக ஊடகங்கள் செயற்படுவதாக தெரியவில்லை. அதற்கு மாறாக அரசாங்கமே ஊடக சுதந்திரத்திற்காக போராடி வருகின்றது. இவ்வாறு அரசாங்கம் ஊடக சுதந்திரத்திற்காக போராடும் நாடு எங்காவது உள்ளதா? என்று அவர் கேள்வி எழுப்பினார்.

ஊடகம்சிங்கள பத்திரிகைதமிழீழம்புலனாய்வுத்துறைபோலீஸ்ரணில்விடுதலைப்புலிகள்
Comments (0)
Add Comment