வித்தியா கொலை வழக்கில் வடக்கு பொலிஸ்மா அதிபருக்கும் தொடர்பு? இன்று குற்றப் புலனாய்வுத்துறையால் கைது

வடமாகாண முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஏ.ஜெயசிங்க, குற்றப்புலனாய்வு பிரிவினரால், இன்று (15) கைதுசெய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புங்குடுதீவு மாணவி கொலைச் சம்பவம் தொடர்பில், சுவிஸ்குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார், பொலிஸ் காவலில் இருந்து தப்பிச் சென்றமை தொடர்பாக வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக, வடமாகாண முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஏ.ஜெயசிங்க, கொழும்பு குற்றப்புலனாய்வு துறையினரால் அழைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையிலேயே, அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவரை, ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதிபர்கைதுகொலைபோலீஸ்வழக்குவித்தியாஸ்ரீலங்கா
Comments (0)
Add Comment