வித்தியா கொலை வழக்கு கைதிகள் உண்ணாவிரதம் இருக்க முடிவு!

புங்­கு­டு­தீவு மாணவி வித்­தி­யாவின் படு­கொலை தொடர்­பான விசா­ர­ணை­களை துரி­தப்­ப­டுத்த வலி­யு­றுத்தி உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தில் ஈடு­ப­ட­வுள்­ள­தாக சந்­தே­கத்தின் பேரில் கைதாகி விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள 10 சந்தேக நபர்கள் ஊர்­ கா­வற்­றுறை நீதி­மன்ற நீதிவான் முன்­னி­லை யில் தெரி­வித்­துள்­ளனர்.

நீதி­மன்றில் பேசும்­போது அவ­தா­ன­மாக பேச­வேண்டும் எனவும் ஒரு வார்த்தை பிழை­யா­னாலும் அது பார­தூ­ர­மான விளைவை ஏற்­ப­டுத்­தி­விடும் என தெரி­வித்த ஊர்­கா­வற்­றுறை நீதிவான், சந்­தேக நபர்கள் பேசு­வ­தாக இருந்தால் அவர்கள் சட்­டத்­த­ர­ணி­யூ­டாக பேச­வேண்டும் எனத் தெரி­வித்தார்.

புங்­கு­டு­தீவு மாணவி வித்­தி­யாவின் படு­கொலை தொடர்­பான வழக்கு விசா­ரணை நேற்­றைய தினம் ஊர்­கா­வற்­றுறை நீதிவான் நீதி­மன்றில் விசா­ர­ணைக்கு எடுத்துக் கொள்­ளப்­பட்­டது.

இதன்­போது குறித்த சந்­தேகநபரில் ஒரு வர், வித்­தி­யாவின் மரண வீட்­டிற்கே தான் சென்­ற­தா­கவும் தன்னை கொலை­யாளி என பொலிஸார் கைது செய்­துள்­ள­தா­கவும் தெரி­வித்தார்.

மேலும் சந்­தேக நபர்கள் நீதிவான் முன்­னி­லையில், தாம் குற்றம் செய்­ய­வில்லை எனவும் தாம் குற்றம் செய்­த­தற்­கான ஆதா­ரங்கள் எதுவும் இருந்தால் தம்மை தூக்­கில்­போ­டு­மாறும் தெரி­வித்­த­தோடு நீண்ட கால­மா­கியும் தமது விசா­ரணை பூர­ணப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை எனத் தெரி­வித்­தனர்.

அத்­துடன் தம்­மீது முன்­வைக்­கப்­பட்ட குற்­றச்­சாட்­டுக்கள் மீதான விசா­ர­ணை­களை துரிதப்படுத்த வலி­யு­றுத்தி தாம் உண்­ணா­வி­ர­த­போ­ராட்­டத்தில் ஈடு­ப­ட­வுள்­ள­தாக தெரி­வித்­தனர்.

இதற்கு பதி­ல­ளித்த ஊர்­கா­வற்­றுறை நீதி­மன்ற நீதிவான் வை.எம்.எம்.றிஹாஸ்,

சந்­தேக நபர்கள் நீதி­மன்றில் பேசும்­போது அவ­தா­ன­மாக பேச­வேண்டும். ஒரு வார்த்தை பிழை­யா­னாலும் அது பார­தூ­ர­மான விளைவை ஏற்­ப­டுத்­தி­விடும். அத்­துடன் இவ்­வ­ழக்குத் தொடர்­பான விசா­ர­ணைகள் குற்றப் புல­னாய்வு அதி­கா­ரி­களால் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. அவை முடி­வ­டைந்­ததும் அது தொடர்­பான அறிக்­கைகள் மன்றில் சமர்ப்­பிக்­கப்­பட்ட பின்­னரே தண்­ட­னைகள் வழங்­கப்­பட முடியும். மேலும் சந்­தேக நபர்கள் நீதி­மன்றில் பேசு­வ­தாக இருந்தால் அவர்கள் சட்­டத்­த­ர­ணி­யூ­டாக பேச­வேண்டும் எனத் தெரி­வித்தார்.

சந்­தேக நபர்­களில் இறு­தி­யாக கைது செய்­யப்­பட்ட பத்­தா­வது சந்­தேக நப­ரான ராஜ்­குமார் சார்­பாக முன்­னி­லை­யா­கி­யி­ருந்த சட்­டத்­த­ரணி, குறித்த சந்­தேக நபர் மன­நோ­யா­ளி­யாக இருப்­ப­தனால் அவரை கொழும்பு மகசின் சிறை­யி­லி­ருந்து யாழ்.சிறைச்­சா­லைக்கு மாற்­ற­வேண்டும் என நீதி­வா­னிடம் கோரி­யி­ருந்தார்.

இதற்குப் பதி­ல­ளித்த நீதிவான் அவர் தொடர்­பான விசா­ர­ணை­களை மேற்­கொள்­வ­தற்­கா­கவே மகசின் சிறைச்கு அவர் மாற்­றப்­பட்­டி­ருப்­ப­தாக தெரி­வித்தார்.

இதே­வேளை வித்­தி­யாவின் சார்பில் முன்­னி­லை­யா­கி­யி­ருந்த சட்­டத்­த­ர­ணி­களும் குறித்த படு­கொலை வழக்குத் தொடர்­பான விசா­ர­ணை­களை துரி­தப்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும் என மன்றில் நீதி­வா­னிடம் கோரி­யி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

அத்­துடன் குறித்த மாண­வியின் சடலம் நீதி­மன்ற பணிப்­பு­ரைக்­க­மைய நிலத்தில் புதைக்­கப்­பட்­டுள்­ளது. இந்­நி­லையில் குறித்த மாண­வியின் இறுதிக் கிரி­யைகள் எதுவும் செய்­யப்­ப­டா­ம­லேயே உள்­ளது. அதா­வது குறித்த மாணவி இந்து மதத்தை சார்ந்­த­வ­ராக உள்­ள­தனால் அவர்­க­ளது மதத்­தின்­படி ஒருவர் இறந்தால் அவ­ரது உடல் தகனம் செய்­யப்­பட்ட பின்­னரே அவ­ரது இறுதிக் கிரி­யைகள் மேற்­கொள்­ள­மு­டியும் என மாண­வியின் தாயார் கவலை வெளி­யிட்­ட­தாக மன்றில் சட்­டத்­த­ரணி சுட்­டிக்­காட்­டி­யி­ருந்­தார்.

மர­பணு அறிக்கை சமர்ப்­பிக்­கா­ததால் ஒத்­தி­வைப்பு

இதேவேளை, குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரி­வி­னரின் அறிக்­கைகள் மன்றில் சமர்ப்­பிக்­கப்­பட்­டி­ருக்­காத நிலையில் குறித்த வழக்கு விசா­ர­ணையை எதிர்­வரும் பெப்­ர­வரி மாதம் எட்டாம் திக­திக்கு நீதிவான் ஒத்திவைத்தார்.

இருக்கஉண்ணாவிரம்கைதிகள்கொலைமுடிவுவழக்குவித்தியா
Comments (0)
Add Comment