வித்தியா படுகொலை குற்றவாளிகளுக்கு தண்டனை உறுதி!

மாணவி வித்தியா வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் நேரடியாக தொடர்புபட்டமை உறுதியாகியுள்ளது.சம்பவத்தை நேரில் பார்த்த நபருடைய சாட்சியம் இன்று ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் மிகவும் இரகசியமாக முறையில் அவரது அறையில் வைத்து பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த வருடம் மே மாதம் பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த வித்தியா என்னும் மாணவி கடத்திச் செல்லப்பட்டு கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
இச் சம்பவம் தொடர்பில் 10 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டிருந்தது.
குறித்த வழக்கு விசாரணைகள் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் இதுவரை நடைபெற்ற விசாரணைகளின் அடிப்படையில் வித்தியா வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட போதும், கொலை செய்யப்பட்ட போதும் அதனை நேரில் பார்த்த புங்குடுதீவினைச் சேர்ந்த சதீஸ்கரன் என்பர் ஸ்ரீலங்கா குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
கைது செய்யப்பட்டவரிடம் நடைபெற்றுவந்த விசாரணைகின் அடிப்படையில் அவரிடம் இருந்து வித்தியா கொலை தொடர்பான பல உண்மைத் தகவல்கள் கிடைக்கப்பெற்றிருந்தது.
அவருடைய வாக்குமூலங்களும் குற்றப்புலனாய்வு பிரிவினரால் நீதவானிடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. வாக்குமூலம் தொடர்பான விசாரணைகளை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி நடாத்துவதாகவும், அதுவரை வழக்கினை ஒத்துவைப்பதாகவும் நீதவான் இன்று உத்தரவிட்டிருந்தார்.
அவர் அரச தரப்பு சாட்சியமாக மாறியுள்ளதாக தெரியவருகின்றது.

ஊர்காவற்துறைகுற்ற புலனாய்வுத்துறைகுற்றவாளிகள்நீதிமன்றம்படுகொலைவித்தியாஸ்ரீலங்கா
Comments (0)
Add Comment