கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டன் நகரில் நடைபெற்று வருகிறது. உலகின் இரண்டாம் நிலை வீரரான ஆன்டிமுர்ரே (இங்கிலாந்து) 4-வது சுற்றில் ஆஸ்திரியாவை சேர்ந்த நிக்கை சந்தித்தார்.
இதில் முர்ரே 7-5, 6-1, 6-4 என்ற நேர் செட்கணக்கில் வென்று கால் இறுதிக்கு தகுதி பெற்றார். அவர் காலிறுதியில் 12-ம் நிலை வீரரான சோங்காவை (பிரான்ஸ்) எதிர் கொள்கிறார். ரிச்சர்டு கேஸ்கியூட்டுக்கு (பிரான்ஸ்) எதிரான ஆட்டத்தில் சோங்கோ 4-2 என்ற கணக்கில் முன்னேறி இருந்த போது ரிச்சர்டு காயத்தால் விலகினார். இதனால் சோங்கா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மற்றொரு ஆட்டத்தில் 6-ம் நிலை வீரர் ரோனிக் (கனடா) 4-6, 3-6, 6-4, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் கடுமையாக போராடி டேவிட் கோபினை (பெல்ஜியம்) வீழ்த்தினார்.
கால் இறுதியில் மோதும் வீரர்கள் விவரம்:-
1. ரோனிக் (கனடா) – சாம்குயரி (அமெரிக்கா) 2. ரோஜர் பெடரா (சுவிட் சர்லாந்து) – சிலிச் (குரோ ஷியா) 3. லுகாஸ் பவுல்லி (பிரான்ஸ்) – தாமஸ் பெர்டிச் அல்லது வெஸ்லி (செக் குடியரசு) 4. ஆன்டி முர்ரே (இங்கி லாந்து) – சோங்கோ (பிரான்ஸ்). பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 8-ம் நிலை வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா)- சுராஸ் (ஸ்பெயின்) மோதி னார்கள். இதில் வீனஸ் 7-6 (7-3), 6-4 என்ற நேர்செட் கணக்கில் வென்றார். மற்றொரு ஆட்டத்தில் நம்பர் ஒன் வீராங்கனையாக செரீனா எளிதில் வென்று கால்இறுதிக்கு தகுதி பெற் றார். 28-ம் நிலை வீராங் கனையான ஷப்ரோவா (செக்குடியரசு) 2-6, 4-6 என்ற கணக்கில் யாரோ ஸ்லாவாவிடம் (கஜகஸ்தான்) தோற்றார்.
கால்இறுதியில் மோதும் வீராங்கனைகள் விவரம்:-
1. செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) – அனஸ்டசியா (ரஷியா) 2. சிபுல்கோவா (சுலோ வாக்கியா) – எலீனா வெஸ் னியா (ரஷியா) 3. ஷிமோனா ஹெலப் (ருமேனியா) – கெர்பர் (ஜெர்மனி) 4. வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா) – யாரோஸ் லாவா (கஜகஸ்தான்).