விரைவில் டெஸ்ட் போட்டிகளுக்கு திரும்புவேன் என வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னணி வீரர்கிறிஸ்கெய்ல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிகெய்ல், காயத்திலிருந்து மீண்டு படிப்படியாக முன்னேறி வருவதாகவும், அடுத்த ஆண்டு நிச்சயம் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவேன் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் நீண்ட நேரம் விளையாடுவதற்கு தேவையான அளவில் உடல் தகுதியில் முன்னேற்றம் அடைந்து வருவதாகவும் அவர்குறிப்பிட்டார்.
தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் மோதிவரும் வெஸ்ட் இண்டீஸ் அணி சாதிக்க, இன்னும் அவகாசம் தேவை என்றும், இளம் வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதிக்க அனுமதிப்போம் என்றும் அவர் ரசிகர்களை கேட்டுக் கொண்டார்.
கடந்த 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் கிறிஸ்கெய்ல் கடைசியாக சர்வதேச டெஸ்ட் போட்டியில் விளையாடினார். பின்னர் முதுகில் காயத்திற்கு அறுவைசிகிச்சை செய்து கொண்டதை அடுத்து, அவர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை.