வெய்ன் ரூனே இங்கிலாந்து அணியின் புதிய கேப்டனாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்

மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணியின் புதிய கேப்டனாக, இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் வெய்ன் ரூனே நியமிக்கப்பட்டார்.இங்கிலாந்தின் உள்ளூர் கால்பந்து கிளப் அணிகளில், மான்செஸ்டர் யுனைடெட் அணியும் ஒன்று. இந்த அணியின் கேப்டனாக இருந்த நெமன்ஜா விடிக், சமீபத்தில் இத்தாலியின் ‘இண்டர்நேசனல்’ கிளப் அணிக்கு சென்றுவிட்டார். இதனையடுத்து புதிய கேப்டனாக யாரை நியமிப்பது என, மான்செஸ்டர் யுனைடெட் அணி நிர்வாகம் ஆலோசித்து வந்தது.

சமீபத்தில் ஓல்டு டிராபோர்டில் நடந்த வாலன்சியா அணிக்கு எதிரான நட்பு போட்டியில், ரூனே தலைமையிலான மான்செஸ்டர் யுனைடெட் அணி வெற்றி பெற்றது. இதனையடுத்து, புதிய கேப்டனாக இங்கிலாந்து அணியின் முன்கள வீரர் ரூனேவை நியமிக்க, மான்செஸ்டர் யுனைடெட் அணியின் மேனேஜர் லுாயிஸ் வான் கால் முடிவு செய்தார். இதற்கான அறிவிப்பை நேற்று முறைப்படி அறிவித்தார். தவிர, துணைக் கேப்டனாக ஸ்காட்லாந்தின் மத்திய கள வீரர் டேரன் பிளட்சரை அறிவித்தார்.

வரும் ஆக., 16ம் தேதி நடக்கவுள்ள பிரிமியர் லீக் தொடரின் முதல் போட்டியில், மான்செஸ்டர் யுனைடெட், சுவான்சியா அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் இருந்து ரூனே கேப்டனாக செயல்படுவார்.

இதுகுறித்து ரூனே கூறுகையில், ‘‘மான்செஸ்டர் யுனைடெட் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. என் மீது நம்பிக்கை வைத்து தேர்வு செய்த மேனேஜருக்கும், அணி நிர்வாகத்தினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சகவீரர்களுக்கு முழு ஒத்துழைப்பு தந்து, அணியை சிறப்பாக வழிநடத்த முயற்சிப்பேன்,’’ என்றார்.

6ம் தேதிஅணிகள்இப்போட்டியில்இருந்துகேப்டனாகசுவான்சியாசெயல்படுவார்தொடரின்நடக்கவுள்ளபிரிமியர்போட்டியில்மான்செஸ்டர்முதல்மோதுகின்றன.யுனைடெட்ரூனேலீக்
Comments (0)
Add Comment