வெற்றிக்கிண்ணத்தை கைப்பற்றிய மருதங்கேணி அணி!

யாழ் மாவட்ட செயலக நலன்புரிக் கழகம் நடாத்திய  அரச அதிபர் வெற்றிக் கிண்ணம்-2016 கால்பந்தாட்டப்போட்டியில் மருத ங்கேணி பிரதேச செயலக அணி  வெற்றி பெற்று கிண்ணத்தை சுவீகரித்தது.
நேற்று செவ்வாய்க்கிழமை பி.ப 1.00  மணியளவில் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி மைதானத்தில் நலன்புரிக் கழக தலைவர் செ.ரகுநாதனின் தலைமையில் இப்போட்டி நிகழ்வு நடைபெற்றது.
இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன், சிறப்பு விருந்தினராக யாழ் மாவட்ட மேலதிக  அரசாங்க அதிபர் பா.செந்தில்நந்தனன், கௌரவ விருந்தினராக தெல்லிப்பளை பிரதேச செயலர் க.ஸ்ரீமோகன் மற்றும் மகாஜனக் கல்லூரி அதிபர் மனிசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த உதைபந்தாட்டப் போட்டியில் மருதங்கேணி பிரதேச செயலக, வேலணை பிரதேச செயலக அணிகள் மோதின. மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற இப்போட்டியில் இரு அணி வீரா்களும் இறுதிவரை சளைக்காமல் போராடினர். ஆட்டநேர முடிவில் 1-1 என போட்டி சமநிலையில் முடிவுற்றதால் சமனிலை தவிர்ப்பு உதைமூலம் வெற்றி தீர்மானிக்கப்பட்டது.இதில் மருதங்கேணி பிரதேச செயலக அணி  வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.
உதைபந்தாட்டம்கிண்ணம்செயலகம்தெல்லிப்பளைமருதங்கேணிவேலணை
Comments (0)
Add Comment