வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற படுகொலை சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற படுகொலை சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களின் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேக நபர்களை  எதிர்வரும் 8 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ரங்க திசாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.

திட்டமிட்ட செயல்

மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின் போது கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் சிறைக்கைதிகள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதில் 27 பேர் உயிரிழந்தமை நினைவில்கொள்ளத்தக்கது.

உயிரிழந்தவர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் கைதிகளின் தலைப்பகுதி மற்றும் நெஞ்சுப்பகுதியில் துப்பாக்கி காயங்கள் காணப்பட்டமையினால்  திட்டமிடப்பட்ட செயல் என நீதிமன்றம் கருதியது

இதன் காரணமாக குறித்த காலப்பகுதியில் வெலிக்டை சிறைச்சாலை ஆணையாளராக செயற்பட்டு வந்த எமில்ரஞ்சன் லமாஹேவா மற்றும் போதை பொருள் தடுப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகரான ரங்கஜீவ ஆகியோர் கடந்த மார்ச் மாதம் 28 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தனர்.

கைது செய்யப்பட்ட இருவருக்கு எதிராகவும் வழக்குகள் தொடரப்பட்டுள்ள நிலையில் விளக்கமறியல் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பிரதிவாதிகளின் சட்டதரணி

இந்நிலையில்  குறித்த இருவரும் உளரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதிவாதிகளின் தரப்பில் முன்னிலையான சட்டத்தரணி மன்றில் தெரிவித்தமையை தொடர்ந்து , சந்தேக நபர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளை ஏற்படுத்தி கொடுக்குமாறு வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீதவான்  பணிப்பரை விடுத்துள்ளார்

மேலும்  வெலிகடையில் இடம்பெற்ற  துப்பாக்கிய பிரயோகம் திட்டமிட்ட குற்றச்செயலாக தெளிவுபட்டுள்ளதாகவும், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து தரப்பினரையும் சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறும் மேலதிக நீதவான தெரிவிதுள்ளமை குறிப்பிடத்தக்கது

 

சிறைச்சாலைபொலிஸ் பரிசோதகர்விசாரணைகள்வெலிக்கடை
Comments (0)
Add Comment