வெளிநாட்டினர் வடக்கு செல்ல இராணுவ அனுமதி வேண்டுமாம்!

இலங்கை கடவுசீட்டற்ற புலம்பெயர் மக்கள் மற்றும் வெளிநாட்டினர்  வடக்கிற்கு வருகை தருவதற்கு மீண்டும் இராணுவ அனுமதி பெறும் நடைமுறை அமுலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.இதன் பிரகாரம் ஓமந்தையில் சோதனைகளின் பின்னரே அனுமதி பெற்றவர்கள் வடக்கிற்கு செல்லமுடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், மன்னார், முல்லைதீவு , வவுனியா மற்றும் கிளிநொச்சி பகுதிகளிற்கு செல்லும் இலங்கை கடவுசீட்டற்ற வெளியினர் பாதுகாப்பு அமைச்சில் அனுமதி பெறும் நடைமுறை மீண்டும் அமுலுக்கு வருவதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

நல்லாட்சி அரசு தங்குதடையற்று எவரும் வடக்கு கிழக்கு பகுதிகிளினிற்கு செல்ல அனுமதிப்பதாகவும் சோதனை சாவடிகள் மூடப்பட்டுவிட்டதாகவும் முன் அனுமதி பெறும் நடைமுறைகள் நீக்கப்பட்டுவிட்டதாகவும் பிரச்சாரங்கள் வெளியிடப்பட்ட நிலையில்  பாதுகாப்பு அமைச்சில் அனுமதி பெறும் நடைமுறை மீண்டும் அமுலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பு கடந்த மாதம் 3ம் திகதி மீள இலங்கை அரசினால் வர்த்தமானி மூலமும் பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் மூலமும் இவ்வறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

வடக்கில் கைதுகள், வெள்ளைவான் கடத்தல்கள் அரங்கேறத்தொடங்கியிருக்கும் சூழலினில் மீள கொண்டுவரப்பட்டுள்ள பாதுகாப்பு அமைச்சில் அனுமதி பெறும் நடைமுறை புலம்பெயர் தமிழ் தரப்புக்களிற்கும் யதார்த்தத்தை கண்டறிய முற்படும் சர்வதேச தரப்பிற்கும் முட்டுக்கட்டை போடுவதாக அமையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

அனுமதிஇராணுவம்சோதனைதாயகம்புலம்பெயர்மக்கள்வடக்குவெள்ளைவான்ஸ்ரீலங்கா
Comments (0)
Add Comment