வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் மக்களுக்கு நேற்று மாலை வடமாகாணசபை உறுப்பினர்கள் நிவாரண உதவிப் பொருட்களை வழங்கினர். சமீபத்தில் கடும் மழையின் போது ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டு முள்ளிவாய்க்கால் மேற்கு, முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதிகளில் 25 குடும்பங்கள் பாடசாலையில் தஞ்சமடைந்திருந்தனர்.
இதுபற்றி மாகாணசபையின் கவனத்திற்கு வடமாகாணசபை உறுப்பினர்கள் துரைராசா ரவிகரன் மேரிகமலா குணசீலன் ஆகியோர் கொண்டு வந்ததையடுத்து அமைச்சர் டெனீஸ்வரன் மேற்படி 25 குடும்பங்களுக்கும் நிவாரண பொருட்களை வழங்க முன்வந்தார். அதன்படி நேற்று முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம அலுவலர் தலைமையில் அவரது பணிமனையில் நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு மக்களுக்கான நிவாரணப் பொருட்களை வடமாகாணசபை உறுப்பினர்கள் துரைராசா ரவிகரன், மேரிகமலா குணசீலன் ஆகியோர் வழங்கினர். மேற்படி நிகழ்வில் முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவரும் கலந்து கொண்டிருந்தார்.