தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் தாயகத்தின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கிளிநொச்சி முல்லைத்தீவு பகுதிகளில் மக்கள் இடம்பெயர்ந்து பள்ளிகளிலும்,மண்டபங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தொடர் மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதோடு,பாடசாலைகளும் மூடப்பட்ட்டுள்ளன. புதுக்குடியிருப்பு பகுதியில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததோடு பாம்புகள் போன்ற விச உயிரினங்களும் வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் அச்சத்தோடு இருக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.
தற்போது தாழமுக்கம் தமிழகத்தை நோக்கி நகர்வதால் ஓரிரு நாட்களில் வழமைக்கு திரும்பலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் இலங்கையில் மண்சரிவு மற்றும் கடல் கொந்தளிப்பால் எட்டு பேர் பலியாகியுள்ளதாகவும் மலையக மக்கள் பெரிதும் பாதிக்கபப்ட்டுள்ளதாகவும் இலங்கை செய்திகள் தெரிவிகின்றன.