ஷவி ஹெர்னாண்டஸ் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு

ஸ்பெயின் கால்பந்து அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான 34 வயது ஷவி ஹெர்னாண்டஸ் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். 

2010-ம் ஆண்டில் உலக கோப்பையை வென்ற ஸ்பெயின் அணியில் முக்கிய பங்கு வகித்த ஷவி ஹெர்னாண்டஸ், 2008 மற்றும் 2012-ம் ஆண்டுகளில் ஐரோப்பிய சாம்பியன் பட்டத்தை வென்ற ஸ்பெயின் அணியிலும் இடம் பிடித்து இருந்தார். ஸ்பெயின் அணிக்காக 133 சர்வதேச போட்டிகளில் விளையாடி இருக்கும் இவர், ‘ஸ்பெயின் அணியில் எனக்குரிய காலம் முடிந்து விட்டது. இன்று முதல் நானும் அந்த அணியின் ஒரு ரசிகராக இருப்பேன்’ என்றார்.

அறிவித்தார்இருந்துஓய்வுசர்வதேசநேற்றுபெறுவதாகபோட்டியில்ஹெர்னாண்டஸ்
Comments (0)
Add Comment