ஷேன் வாட்சன் சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு

ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சன், சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

தமது டிவிட்டர் வலைத்தளத்தில் இதனை அவர் பதிவு செய்துள்ளார். ஒருநாள் மற்றும் ட்வெண்டி ட்வெண்டி போட்டிகளில் கவனம் செலுத்த விரும்புவதால் ஓய்வு முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆஷஸ் கிடைத்த தோல்வியின் எதிரொலியாக ஓய்வு பெறும் ஷேன் வாட்சன் எடுத்ததாகவும் கூறப்படுகிறது. 34 வயதாகும் வாட்சன், கடந்த 2005-ஆம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார். 59 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள வாட்சன், 3 ஆயிரத்து 731 ரன்கள் குவித்துள்ளார். 75 விக்கெட்டுகளையும் அவர் வீழ்த்தியுள்ளார்.

ஆஸ்திரேலியாஓய்வுகிரிக்கெட் வீரர்சர்வதேச டெஸ்ட் போட்டிஷேன் வாட்சன்
Comments (0)
Add Comment