ஸ்ரீலங்காவை வெற்றிகொள்ள சிறந்த தருணம்! அஸ்கார்

இம்முறை உலகக்கிண்ண ‘ருவென்ரி-20′ தொடரில் ஸ்ரீலங்கா  அணியை வெற்றி கொள்வதற்கு மிகச்சிறந்த வாய்ப்பு இருப்பதாக ஆப்கானிஸ்தான் அணித்தலைவர் அஸ்கார் ஸ்ரனிக்ஷை தெரிவித்துள்ளார். இந்தியாவில் நடைபெற்றுவரும் ஆறாவது உலகக்கிண்ண ‘ருவென்ரி-20′ தொடரின் இன்றைய போட்டியில் ஸ்ரீலங்கா  மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.

இந்நிலையில் இன்றைய போட்டி தொடர்பில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த ‘ கடந்த 2015 ஆம் ஆண்டில் சங்ககார மற்றும் ஜெயவர்த்தன போன்ற தலைசிறந்த அனுபவம் மிக்க வீரர்கள் இலங்கை அணியில் இருந்தனர். உலகக்கிண்ணத்தை பெறுவதற்கு அவர்கள் சிறப்பாக விளையாடியிருந்தனர்.

ஆனால் இம்முறை உலகக்கிண்ணத்தில் அவர்கள் இல்லை. பெரும்பாலும் புதுமுக வீரர்களே ஸ்ரீலங்கா  அணியில் உள்ளனர். எனவே இம்முறை உலகக்கிண்ண தொடரில் இலங்கை அணியை வெல்வதற்கு சிறந்த வாய்ப்பு எமக்கு உள்ளது’ என தெரிவித்துள்ளார்.  உலகக்கிண்ண தகுதிச்சுற்றுப் போட்டிகளில் சிறப்பாக விளையாடி முதன்மை சுற்றுக்குள் ஆப்கான் நுழைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிஸ்தான்உலகக்கோப்பைகிரிக்கெட்விளையாட்டுஸ்ரீலங்கா
Comments (0)
Add Comment