ஸ்ரீலங்கா ஆட்லறிப் படைபிரிவு தளபதி விபத்தில் பலி!

சிறிலங்கா இராணுவத்தின் ஆட்டிலறிப் படைப்பிரிவின் தளபதியான, மேஜர் ஜெனரல் சுமித் மானவடு, தலையில் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
கஸ்பேவ பகுதியில் உள்ள வீட்டில் நடந்து கொண்டிருக்கும் கட்டுமானப் பணி ஒன்றின் போது, தவறி வீழ்ந்த கம்பு ஒன்று மேஜர் ஜெனரல் சுமித் மானவடுவின் தலையில் தாக்கி அவர் காயமடைந்ததாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்தார்.
தலையில் படுகாயமடைந்த அவருக்கு கொழும்பு தேசிய மருத்துவமனையில் அவசர சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2010ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் சரத் பொன்சேகா தோல்வியடைந்தவுடன் அவரைக் கைது செய்யும் நடவடிக்கைக்கு மேஜர் ஜெனரல் சுமித் மானவடு பெர்றுப்பாக நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மேஜர் ஜெனரல் சுமித் மானவடு (வயது 55), கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றிருந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்ததாக ஸ்ரீலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா ஆட்லறி படைப்பிரிவால் பல்லாயிரம் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆட்லறிஇராணுவம்உயிரிழப்புசிகிச்சைபடைப்பிரிவுமருத்துவமனைவிபத்துஸ்ரீலங்கா
Comments (0)
Add Comment