காயமடைந்த கேகாலை மாவட்ட உறுப்பினர் சந்தித் சமரசிங்க பாராளுமன்றத்தில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக, அவை நடவடிக்கைகள் 10 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. சபை நடவடிக்கைகளின் போது ஏற்பட்ட கைகலப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் கேகாலை மாவட்ட உறுப்பினர் சந்தித் சமரசிங்க காயமடைந்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறித்து, பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவினால் தெரிவிக்கப்பட்ட சில கருத்துக்கள் காரணமாகவே இந்த குழப்பநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.