இந்த விவகாரம் தொடர்பில் பிரதியமைச்சர் தெரிவித்துள்ளமை, சமூக வலைத்தளங்களில் வீடியோவாக தரவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில், பிரதியமைச்சர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “மீதொட்டமுல்லயில் இடம்பெற்றது அனர்த்தம் அல்ல. உண்மையில், அங்கு மனிதப் படுகொலைகளே இடம்பெற்றுள்ளன. இந்தச் சம்பவத்துடன் நேரடியாக மற்றும் மறைமுகமாக தொடர்புடையவர்கள் தண்டிக்கப்படவேண்டும்.
சிறார்கள், சேற்றுடன் சிக்கிப் பலியானதை நாம் கண்டோம். வீடுகளுக்குள் சிக்கியோர், தங்களுடைய அலைபேசிகளின் ஊடாக, காப்பாற்றுமாறு தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளனர். அவ்வாறானவர்களில், மூச்செடுக்கமுடியாமல் விசவாயுவை சுவாசித்து மரணித்தவர்களும் உள்ளனர். வேறு நகரத்தைச் சுத்தப்படுத்துவதற்கு சென்றிருந்த நிலையிலேயே, மீதொட்டமுல்ல மக்கள் பலியாகியுள்ளனர். இதுவொரு சமூகப் படுகொலையாகும். இந்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.